ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?அது கட்டாய கடமையா?

கேள்வி

ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன? அது கட்டாய கடமையா?

பதிலின் சுருக்கம்:

ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பவர் ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்றது போல் அவருக்கு நற்கூலியைப் பதிவு செய்திருப்பார். மேலும் அறிய, விரிவான பதிலைப் பார்க்கவும்.

பதில்:

உள்ளடக்கம்:

• ஷவ்வால் நோன்பு கடமையா?

• ஷவ்வால் 6 நாட்கள் நோன்பு நோற்பதன் சிறப்புகள்

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

ஷவ்வால் நோன்பு கடமையா?

ரமழானின் கடமையான நோன்பிற்குப் பிறகு ஷவ்வாலின் ஆறு நாட்கள் நோன்பு நோற்பது என்பது வாஜிப் (கட்டாயம் )அல்ல மாறாக அது ஸுன்னாஹ் முஸ்தஹப்(விரும்பத்தக்கது).

ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்க முஸ்லிமுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதில் நன்மையும் மகத்தான கூலியும் உள்ளது.

ஷவ்வால் 6 நாட்கள் நோன்பு நோற்பதன் சிறப்புகள்:

“யார் இந்த ஆறு நாட்களில் நோன்பு நோற்கின்றாரோ அவர் ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்றது போன்ற நற்கூலியைப் பதிவு செய்திருப்பார்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸஹீஹான ஹதீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபூ அய்யூப் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்:

“யார் ரமழானில் நோன்பு நோற்று,அதை தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நாட்கள் நோன்பினை கடைப்பிடிக்கிறார்களோ, அது அவர் வாழ்நாள் முழுவதும் நோன்பு நோற்றது போலாகும்.”

(முஸ்லிம், அபு தாவூத், அல்-திர்மிதி, அல்-நஸாஈ மற்றும் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது).

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் இதை பற்றி கூறும் போது இவ்வாறு விளக்கினார்கள்:

“ரமழானிற்கு பிறகு (‘ஈதுல் ஃபித்ர்) (ஷவ்வால் மாதத்தில்) ஆறு நாட்கள் நோன்பு நோற்பவர் அந்த வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மையை அடைவார்கள்.

[ அதாவது,எவர் ​​ஒரு நல்ல செயல் (ஹஸனா) செய்கிறாரோ அவருக்கு பத்து நற்செயல் செய்த கூலி கிடைக்கும்.” ]

மற்றொரு அறிவிப்பின்படி: “அல்லாஹ் ஒவ்வொரு நற்செயலிற்கும் அது போன்ற பத்து நன்மைகளை உண்டாக்கியுள்ளான்,
எனவே ஒரு மாதம்(ரமழான்) பத்து மாதங்கள் நோன்பு நோற்பது போன்றது,மேலும் அதை தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்பு நோற்பது(நன்மையின் அடிப்படையில் 2மாதம்) அந்த வருடத்தை நிறைவு செய்கிறது.”

(அல்-நஸாஈ மற்றும் இப்னு மாஜா. மேலும் பார்க்கவும் சாஹி அல்-தர்கிப் வால்-தர்ஹிப், 1/421)

இப்னு குசைமாவில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:

“ரமழான் மாதத்திற்கான நோன்பு அதைப் போன்ற பத்து (மாத) பலனைத் தருகிறது, மேலும் ஆறு நாட்கள் நோன்பு இரண்டு மாதங்களின் வெகுமதியைக் கொண்டு வருகிறது, அதுவே ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது ஆகும் .”

ரமலான் நோன்புக்குப் பிறகு ஷவ்வாலின் ஆறு நாட்கள் நோன்பு நோற்பது ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்பது போல் ஆகிறது என்று ஹன்பலி மற்றும் ஷாஃபிஈ  ஃபுகாஹா(சட்டதுறை அறிஞர்கள்) விளக்கியுள்ளார்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு நற்செயலிற்கும் பத்து மடங்கு வெகுமதியைத் கிடைப்பதனால் நஃபிலான நோன்புகளுக்கும் வெகுமதியின் பத்து மடங்கு பெருக்கம் என்பது பொருந்தும்.

ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் மற்றொரு முக்கியமான நன்மை என்னவென்றால், ஒரு நபரின் கடமையான ரமழான் நோன்புகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை இது ஈடு செய்கிறது.
ஏனெனில் யாரும் (ரமழானில்) அவரது நோன்பை எதிர்மறையாக பாதிக்கும் குறைபாடுகள் அல்லது பாவங்கள் செய்யாமல் இருப்பவர் இல்லை.

ஏனெனில் மறுமை நாளில், நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறியது போல், அவரது கடமையான செயல்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக அவரது மற்ற நபிலான வணக்கங்களில் இருந்து நற்ச்செயல்கள் எடுக்கப்படும்.

மறுமை நாளில் மக்களிடையே முதன் முதலில் கணக்குக் கேட்கப்படுவது அவர்களின் தொழுகையாகும்.

கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் அவருடைய தூதர்களாகிய வானவர்களிடம் கூறுவான், (அவனுக்கு நன்றாகத் தெரியும் என்ற போதிலும்) “என் அடிமையின் தொழுகை அது முழுமையானதா அல்லது முழுமையடையாததா என்பதைப் பாருங்கள்.”

அது முழுமையாக இருந்தால் முழுமைபடுத்தப் பட்டதாக பதியப்படும்.மேலும் அதில் ஏதாவது குறை இருந்தால்,

அப்போது அல்லாஹ் “என் அடிமை ஏதாவது உபரியான தொழுகையை செய்திருக்கிறானா என்று பாருங்கள்” என்று கூறுவான்.

சில உபரியான தொழுகைகளை அவர் செய்தால் “என் அடிமையின் கடமைகளை அவனது உபரியான செயல்களில் இருந்து முழுமை படுத்துங்கள்.”(என அல்லாஹ் கூறுவான்.)அப்போது அவனுடைய எல்லாச் செயல்களும் இதே முறையில் கையாளப்படும்.
-அபூதாவூத்.

அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

Source:IslamQ&A

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d