ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்.

கேள்வி 7️⃣ :

ரமழான் மாதத்தில் இறந்துபோகும் நபர்களுக்கு சிறப்பு இருப்பதாக ஏதேனும் ஸஹீஹான செய்திகள் உள்ளதா.? மற்றும் ரமழான் மாதத்தில் இறப்பு ஏற்படுவது குறித்த நபரின் இறையச்சத்தை காட்டுகிறதா.?

📝 பதில் :

இது பற்றி சில செய்திகள் காணப்படுகின்றன. ஆனால் அவையனைத்தும் பலஹீனமான செய்திகளாகும்.

கேள்வி 8️⃣ :

தன் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தினால் ரமழான் மாதத்தின் நோன்புகளை முறித்துக் கொள்ளும் கர்ப்பிணி பெண் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.?

மேலும் பாலூட்டும் தாய்மார்கள் குறித்த சட்டம் என்ன?

📝 பதில் :

இந்த விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

 

முதல் தரப்பு அறிஞர்கள் கூறுவதாவது : “அத்தகைய பெண்கள் விடுபட்ட நோன்புகளை திரும்ப நோற்க வேண்டும்.”

 

இரண்டாவது தரப்பு அறிஞர்கள் கூறுவதாவது : “விடுபட்ட நோன்புகளை திரும்ப நோற்க வேண்டும்; அத்துடன் பரிகாரமாக ஏழைகளுக்கும் உணவளிக்க வேண்டும்.”

 

மூன்றாவது தரப்பு அறிஞர்கள் கூறுவதாவது : “விடுபட்ட நோன்புகளை திரும்ப நோற்க தேவையில்லை; ஆனால் (அதற்கு) பகரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.”

 

நான்காவது தரப்பை சேர்ந்த சில அறிஞர்கள் கூறுவதாவது : “விடுபட்ட நோன்பை திரும்ப நோற்கவோ, பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்கவோ அவசியமில்லை.”

 

கடைசி தரப்பைச் சேர்ந்த அறிஞர்கள் தமது நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக அனஸ் பின் கஅப் அல்-கல்பி رضي الله عنه அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸை ஆதாரமாக வைக்கிறார்கள்.

 

குறித்த ஹதீஸில் சொல்லப்பட்டதாவது :

“அனஸ் அவர்கள் ஒரு பயணியாக நபி ﷺ அவர்களிடம் வருகிறார்கள்; அவரிடம் சாப்பிடுமாறு நபியவர்கள் கட்டளையிடும்போது, தாம் நோன்பில் இருப்பதாக அவர் பதிலளிக்கிறார்.

அதற்கு நபியவர்கள் கூறியதாவது :

 

أما علمت إن الله وضع عن المسافر شطر الصلاة والصيام، وعن الحاملأما علمت إن الله وضع عن المسافر شطر الصلاة والصيام ، وعن الحامل والمرضع

 

“பயணிக்கான தொழுகையில் பாதியையும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்ணின் நோன்பிற்கும் அல்லாஹ் விலக்கு அளித்துள்ளது உங்களுக்குத் தெரியாதா..?”

 

(நூல் : திர்மிதீ 715, ஸுனன் நஸாயீ 2275 ; இதனை ஸஹீஹ் என இமாம் முக்பில் அவர்கள் “ஸஹீஹ் அல்-முஸ்னத் 7” -ல் கூறியுள்ளார்கள்.)

 

ஆனாலும் எமக்கு தெளிவாகப்படும் கருத்து என்னவெனில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட நோன்புகளை திரும்ப நோற்க வேண்டும்; அதேசமயம் அவர்கள் பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க தேவையில்லை.

 

ஏனென்றால் அல்லாஹு தஆலா கூறுகிறான் :

 

وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ

 

 

“…. ஆனால் (அந்நாட்களில்) உங்களில் எவர் நோயாளிகளாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தாரோ (அவருக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுண்டு; விடுபட்ட நோன்புகளை) மற்ற நாட்களில் எண்ணி(நோற்றுவி)டவும்….”

(அல்குர்ஆன் 2:184)

 

மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply