ஜும்ஆ அன்று இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் தொழுகையாளிகளை முன்னோக்கி சில உபதேசங்களை கூறுகின்றனரே இது அனுமதிக்கப்பட்டதா?

கேள்வி:இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது
“சில நாடுகளில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் தொழுகையாளிகளை முன்னோக்கி சில உபதேசங்களை கூறுவார் இது அனுமதிக்கப்பட்டதா?

பதில்:

இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது
இப்படியான செயல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவருடைய காலத்தில் இருக்கவில்லை.நபியவர்கள் பள்ளிக்கு நுழைந்தால் மிம்பரை நாடி முஅத்தின் அதானை கூறிமுடிக்கும் வரை அதிலேயே உட்கார்ந்திருப்பார்கள் .பின்பு உரையை ஆரம்பிப்பார்கள். அதற்கு முன்னர் எவ்வித உபதேசத்தையும் அவர் செய்ய மாட்டார்.அவர் மிம்பரை வந்தடைந்தால் அதிலே உட்காருவார். பின்பு முஅத்தின் அதான் கூறுவார் பின்பு குத்பாவை அவர் ஆரம்பிப்பார். இதுதான் நபியவர்களின் வழிமுறை. இமாம் மிம்பருக்கு ஏறுவதற்கு முன்னர் அவர்களுக்கு உபதேசம் செய்வது நபியவர்களின் வழிமுறைக்கு முரணானது.மாறாக இமாம் மிம்பரை நாடி அதிலே உட்காருவார் அதன்பின்னர் முஅத்தின் அதான் கூறிமுடிந்த பின்பு குத்பா உரையை ஆரம்பிப்பார்.

மஜ்மூஉல் பதாவா இப்னு பாஸ் (30/255)

 

மொழிபெயர்ப்பு:அஹ்ஸன் அல்கமி (ஆசிரியர்:மர்கஸுஅல்கமா )

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply