குர்ஆனின் சில பாகங்களை மனனம் செய்து விட்டு பின்னர் மறந்துவிட்டார்!

கேள்வி:

கண்ணியத்திற்குரிய ஷேக், மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் மனனம் செய்ய குர்ஆனின் சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாடமாக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு முடிந்து அடுத்த வகுப்பிற்கு செல்லும்பொழுது, முந்தைய வகுப்பின் சூறாக்கள் சிலவற்றை மறந்துவிடுகிறோம். இது ஹராம் ஆகுமா?

பதில்:

உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு மனிதனுக்கு குர்ஆனின் சில பகுதிகளின் மனனத்தை கொடுத்தால், அது ஒரு மிகப்பெரும் அருட்கொடை என்பதை அறியுங்கள். அதை அவா் அலட்சியப்படுத்த வேண்டாம்.

குர்ஆனை மனனம் செய்த பின்பு மறப்பவரை கடுமையாக அச்சுறுத்தி ஓர் ஹதீஸ் வந்துள்ளது. ஆனால் அந்த ஹதீஸ் குர்ஆனை புறக்கணித்து, அதை விட்டு விழகி மறப்பவனை குறிக்கிறது. வாழ்வாதாரம் ஈட்டல், குழந்தை வழர்ப்பு, மாணவராக இருந்தால் மற்றபாடங்களை படிப்பது ஆகியவற்றால் காலநெரிசலுக்கு உள்ளாகி மறந்தால், அவர் மீது எந்த குற்றமும் இல்லை, அவா் வேண்டுமென்றே குர்ஆனை மறந்தவராக கருதப்பட மாட்டார்.

அல்லாஹ் கூறுகிறான்:

رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَاۚ

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! ”

2: 286.

ஆகையால் இவர்களின் மீது எந்தக்குற்றமும் இல்லை என்று, அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கிறேன். ஆனால் அவர்கள் தாங்கள் மனனம் செய்தவற்றை மீண்டும் மனனமாக்க முயற்சிக்கவேண்டும். அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்:

இந்தக் குர்ஆனை (திரும்ப திரும்ப ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், முஹம்மதின் (صلى الله عليه سلم) உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் தப்பிவிடக் கூடியதாகும்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [ஸஹீஹ் முஸ்லிம்]

-ஷேய்க் உஸைமீன், ல்ஸலதுல் லிகாஅ அஷ்ஷஹ்ரி.

கேள்வி:

மாணவர் ஒருவர் குர்ஆனை ஓதி மனனம் செய்து விட்டு பின்னர் மரந்துவிட்டார், இவரை பற்றிய இஸ்லாமிய சட்டம் என்ன?

பதில்:

ஒருவர் குர்ஆனை மனனம் செய்துவிட்டு, பின்னர் அதை புறக்கணித்து மறந்துவிட்டால், அவா் தன்னை ஒரு பெரும் பாவத்தில் அழ்திவிட்டார். ஆனால் அவா் மனித இயல்பால், அல்லது படிக்க முடியாமல் நேர நெரிசலுக்கு உள்ளாகி மறந்துவிட்டால் அவாின் மீது குற்றம் இல்லை. ஏனென்றால் மறதி மனித இயல்பில் ஒன்று. நபி صلى الله عليه وسلم கூறினார்கள் :”நானும் உங்களை போன்று ஒரு மனிதன் தான், நீங்கள் மரப்பதை போன்று நானும் மறப்பேன்”

ஆக ஒரு மணிதர் மனித இயல்பின் காரணமாக, அல்லது வாஜிபான விஷயங்களினால் நேர நெரிசலுக்கு உள்ளாகி குர்ஆனின் சில பகுதிகளை மறந்தால் அவா் மீது எந்த குற்றமும் இல்லை.

ஷெய்க் உஸைமீன், ஸில்ஸிலதுல் ஃபதாவா நூருன் அலா அத்தர்ப்

السؤال

يقول: فضيلة الشيخ، من المعلوم أنه يقرر على الطلاب حفظ شيء من كتاب الله تعالى، فإذا جاءت السنة الثانية نسينا بعض السور المقررة في الفصل الماضي، فهل يحرم على الإنسان نسيان هذه السور المقررة؟

الجواب:

ليعلم أن الله تعالى إذا منَّ على الإنسان بحفظ شيء من كتابه فإنه من النعم العظيمة التي لا ينبغي للإنسان أن يهملها، وقد جاء حديث فيه وعيد شديد على من نسي شيئاً حفظه من كتاب الله، لكن المراد من نسيه معرضاً عنه زاهداً فيه، أما من نسيه لاشتغاله بتحصيل معاشه ومعاش أولاده، وكذلك باشتغاله إذا كان طالباً بالدروس الأخرى فإنه لا إثم عليه؛ لأنه لا يعد تاركاً له على وجه العمد، وقد قال الله تعالى:﴿ رَبَّنَا لا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا﴾ [البقرة:286] فأرجو الله سبحانه وتعالى ألا يكون على هؤلاء إثم، ولكني أحثهم على أن يتعاهدوا ما حفظوه من كتاب الله كما أمر بذلك رسول الله صلى الله عليه وعلى آله وسلم فقال:« تعاهدوا القرآن، فوالذي نفسي بيده لهو أشد تفصياً من الإبل في عقلها».

المصدر: سلسلة اللقاء الشهري > اللقاء الشهري [58]

القرآن وعلومه > فضائل القرآن وآدابه

هل يأثم من حفظ القرآن ثم نسيه ؟

السؤال:

هذا الطالب يقول: ما حكم الشرع في الطالب الذي يقرأ القرآن ثم يحفظه ثم ينساه؟

الجواب:

الشيخ: نعم إذا حفظ الإنسان القرآن، ثم نسيه، فإن كان عن هجر عن القرآن ورغبة عنه، فإنه قد عرض نفسه لإثم عظيم، وإن كان بمقتضى السجية والطبيعة البشرية، أو أتاه ما يشغله عند عوده، فإنه لا يأثم في ذلك؛ لأن النسيان من طبيعة الإنسان كما قال النبي عليه الصلاة والسلام: «إنما أنا بشر مثلكم أنسى كما تنسون»، فإذا كان النسيان بمقتضى طبيعة البشرية، أو من أجل أنه تشاغل بأمور واجبة أوجبت نسي شيء من القرآن فإن ذلك لا يكون سبباً لإثمه.

المصدر: سلسلة فتاوى نور على الدرب > الشريط رقم [226]

القرآن وعلومه > فضائل القرآن وآدابه

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply