உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.)
– Bro. Abu Julybeeb Saajid As-sailanee
31) எப்போதிருந்து இக்காரியத்தை தவிர்க்க வேண்டும்?
துல்ஹிஜ்ஜாவின் முதல் 10 நாட்களுக்குள் நுழைந்து விட்டால் தவிர்க்க வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக உம்மு ஸலமா (ரலியல்லாஹு ‘அன்ஹா) அறிவிப்பதாவது :
‘துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் வந்துவிட்டால், உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால் அவரது முடிகளை, நகங்களை களைய வேண்டாம்.
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 3998
32) இந்த தடை குர்பானி கொடுப்பவருக்கானது மட்டுமா.? அல்லது அவரது குடும்பத்திற்காகவும் சேர்த்தா.?
இந்த தடை குர்பானி கொடுக்கும் நபருக்கானது மட்டுமே.
33) ஒருவர் நகம் வெட்டுதல், முடிகளை நீக்குதல் போன்றவற்றை வேண்டுமென்றே செய்துவிட்டால், அவரது உழ்ஹிய்யா செல்லுப்படியாகுமா?
ஆம், செல்லுப்படியாகும், ஆனால் நபி(ஸல்) அவர்களுக்கு மாற்றம் செய்துள்ளார்; அதனால் அவர் பாவமன்னிப்பு தேட வேண்டும். மீண்டும் இவ்வாறாக செய்யக்கூடாது.
34) உழ்ஹிய்யா கொடுப்பவர் முடி, நகங்களை வெட்டக்கூடாது என்ற தடை எப்போது நீங்கும்.?
உழ்ஹிய்யாவை அறுத்துவிட்டால் அந்த தடை நீங்கிவிடும்; அதன் பின்னர் அவர் முடி, நகங்களை வெட்டிக் கொள்ளலாம்.
35) உழ்ஹிய்யா கொடுப்பவருக்கும், இஹ்ராம் அணிந்திருக்கிறவருக்கும் இடையேயான வித்தியாசம் என்ன.?
இவ்விருவருக்குமிடையே வித்தியாசம் இருக்கிறது.
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர் ஹதீ கொடுக்கும் வரையிலும் உடலுறவு கொள்ளக் கூடாது, தைக்கப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது, வேட்டையாடக் கூடாது, நறுமணம் பூசிக்கொள்ள கூடாது.
ஆனால் உழ்ஹிய்யா கொடுக்கும் மற்றவர்களுக்கு இந்தளவிற்கு கட்டுப்பாடுகள் இல்லை; ஆனாலும் சில கட்டுப்பாடு உண்டு.
– முற்றும்