உடலிலிருந்து ரத்தம் வெளியேறுவது வுழு-வினை முறிக்குமா?

பதிலின் சுருக்கம்:

இரத்தம் வெளியாவது வுழூவை முறிக்காது என்பது அடிப்படைக் கொள்கை. பெண்ணுறுப்பைத் தவிர உடலின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் இரத்தப்போக்கு ஒருவருடைய வுழூவை முறிக்காது.

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

பெண்ணுறுப்பைத் தவிர உடலின் வேறு எந்தப்பகுதியிலிருந்தும் இரத்தம் வெளியாவது ஒருவருடைய வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இரத்தம் வெளியாகுவது வுழூவை முறிக்காது என்பது அடிப்படைக் கொள்கை.

வணக்கங்கள் வஹியின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும், எனவே எந்தவொரு வணக்க வழிபாடும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டதாக ஆதாரங்கள் இல்லாமல் கூறுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

பெண்ணுறுப்பைத் தவிர மற்ற பகுதிகளில் இருந்து வெளியாகும் இரத்தம் அதிகமாக அதிகமாக இருந்தால், வுழூ முறிந்துவிடும் என்பது சில அறிஞர்களின் கருத்தாக உள்ளது. எனவே இந்த நிலையில் உள்ள (அதிகமாக இரத்தம் வெளியாகிய) ஒருவரின் பாதுகாப்பான/சிறந்த தேர்வு என்பது வுழூ செய்வதாகும்.

முஹம்மது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதை விட்டுவிடுங்கள், உங்களுக்கு சந்தேகம் வராததின் பக்கமே நிலைத்திருங்கள் (செயல்படுங்கள்).”

ஸுனன் நசாஈ, 8/328; ஸூனன் திர்மிதி, 7/221 துஹ்ஃபத் அல்-அஹ்வதி; அல்-ஹகீம், 2/13, 4/99)

அல்லாஹ் நன்கு அறிந்தவன்!

Source : Islamqa.com

மொழிபெயர்ப்பு:Islamqatamil Admin Team

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply